கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Update: 2019-06-07 09:50 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளது.  தென் கிழக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து உள்ளது. கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு பகுதிகளுக்கு செல்லும் . வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்