நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாடுபட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு
தி.மு.க. சட்ட திட்டத் திருத்தக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார்.
சென்னை,
கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அதே போன்று, மு.க.ஸ்டாலினை அடியொற்றி சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்ட திட்டத் திருத்தக்குழு செயலாளர் வக்கீல் பி.வில்சன் மற்றும் பாலவாக்கம் க.சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர்கள் வக்கீல் ப.குமரேசன், இரா.தாமரைச்செல்வன், அ.சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.