தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணை வேந்தராக கே.பார்த்தசாரதி நியமனம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கே.பார்த்தசாரதியை நியமித்து உள்ளார். இவர் பொறுப்பு ஏற்கும் தினத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார்.
சென்னை,
தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கே.பார்த்தசாரதியை நியமித்து உள்ளார். இவர் பொறுப்பு ஏற்கும் தினத்தில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார். கே.பார்த்தசாரதி பயிற்றுவித்தலில் நீண்ட அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
அதே பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர், டீன் மற்றும் இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளை கே.பார்த்தசாரதி வகித்திருக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் ஆவார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் படிப்புகள் வாரியத்தின் உறுப்பினராகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் செயற்குழு, கல்விக்குழுவிலும் அங்கம் வகித்திருக்கிறார். இதுதவிர பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் திட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் கே.பார்த்தசாரதி இருந்திருக்கிறார். ஆசிரியராக 117 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும், கல்வி சார்ந்த புது நிகழ்ச்சிகளை அமல்படுத்துவதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
17 பேருக்கு ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்கு வழிகாட்டியுள்ளார். 24 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு, 8 புத்தகங்களையும் எழுதிய நீண்ட அனுபவத்தை கே.பார்த்தசாரதி பெற்றிருக்கிறார்.
மேற்கண்ட தகவல் ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட பார்த்தசாரதிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமன ஆணையை வழங்கினார். அப்போது அவர்களுடன் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் இருந்தார்.