சென்னை கோட்டத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி ‘சாகச பயணம்’ 3 ஆண்டுகளில் 17,934 பேர் பிடிபட்டனர்
சென்னை கோட்டத்தில் ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் செய்ததாக கடந்த 3 ஆண்டுகளில் 17,934 பேர் பிடிபட்டனர்.
சென்னை,
இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்கின்றனர். ரெயிலில் பயணிக்கும் மக்கள் தினசரி பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். ரெயில் பயணிகளுக்கு, பாதுகாப்பான பயணத்தை அளிக்க ரெயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் ரெயில்களில் பல திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மேலும் ரெயில்களில் சாதாரண பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டிகளில் பயணம் மேற்கொள்வது, டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது போன்ற பல சம்பவங்களும் நடைபெறுகிறது.
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில்களில் பயணம் செய்ய குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் சிலர் அந்த டிக்கெட்டை கூட எடுக்காமல் ஓசியில் பயணம் செய்கின்றனர்.
இதுபோன்று டிக்கெட் எடுக்காமல் பயணிபவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது சோதனை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த 2017-ம் ஆண்டு டிக்கெட் எடுக்காமல் 20 பேரும், 2018-ம் ஆண்டு 70 பேரும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 1 நபரும் பயணித்ததாக அவர்களுக்கு ரூ.73 ஆயிரத்து 718 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
ரெயில்களில் படிக்கட்டில் நின்று ஆபத்தை உணராமல் சிலர் ‘சாகச பயணம்’ செய்கின்றனர். சாகச பயணிகளிடம் உள்ளே வந்து நிற்குமாறு கூறினால் ‘காற்று வாங்குவதற்காக நிற்கிறேன் உங்கள் வேலையை பாருங்க’ என அடுத்த பதிலில் வாயை அடைக்கின்றனர். இவ்வாறு பயணிப்பவர்கள் மீது ரெயில்வே சட்டம் ‘156’ பிரிவின் கீழ் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்ததாக 7 ஆயிரத்து 633 பேரும், 2018-ம் ஆண்டு 8 ஆயிரத்து 41 பேரும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 2 ஆயிரத்து 260 பேர் என 3 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 934 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களிடம் இருந்து ரூ.57 லட்சத்து 71 ஆயிரத்து 590 வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக 2017-ம் ஆண்டு 92 பேர் மீது 119 வழக்குகளும், 2018-ம் ஆண்டு 238 பேர் மீது 342 வழக்குகளும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 36 பேர் மீது 64 வழக்குகளும் பதிவு செய்து ரெயில்வே போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு திருநங்கைகள் ஒரு விதத்தில் தொந்தரவு அளிக்கின்றனர். அந்த வகையில் ரெயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் வசூலிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் ஒரு சில திருநங்கைகள் பணம் வசூலிப்பதில் பயணிகளிடம் அத்துமீறுகின்றனர்.
அவ்வாறு அத்துமீறும் திருநங்கைகள் மீது ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். சென்னை கோட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பயணிகளிடம் அத்துமீறியதாக 1,563 பேர், 2018-ம் ஆண்டு 1,547 பேர், 2019-ம் ஆண்டு ஏப்ரல் வரை 622 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்து ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 290 வசூலித்துள்ளனர். இது போன்று திருநங்கைகள் அத்துமீறுவதை தடுக்க அவர்களுக்கும், அரசு முறையான வேலை வாய்ப்பை உருவாக்கிட வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.