நிலம் விற்பதாக ரூ.42 லட்சம் மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் கேரள தம்பதி தீக்குளிக்க முயற்சி
நிலம் விற்பதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கேரள தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவருடைய மனைவி அன்னத்தாய் (62). மோகன் தனது மனைவியுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்த அவர்கள், முதல் தளம் செல்லும் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்தனர். திடீரென அவர்கள் ஒரு கேனில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தங்களின் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும், அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த அலுவலர்கள் சிலரும் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணையை தொடர்ந்து மோகனும், அவருடைய மனைவியும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்தனர். கலெக்டரும் அவர்களிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தினார்.
நாங்கள் சின்னக்கானலில் வசித்து வருகிறோம். எங்களது நிலத்தை விற்று சொந்த ஊரான தேனியில் நிலம் வாங்க முடிவு செய்தோம். அப்போது கோடாங்கிபட்டியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான நிலம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் இருப்பதாக போடியை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் கூறினார். அதை நம்பி கோடாங்கிபட்டியை சேர்ந்த நபரிடம் ரூ.22 லட்சம் முன்பணமாக கொடுத்தோம். அதேபோல், கெங்குவார்பட்டியை சேர்ந்த நபரிடமும் நிலம் வாங்க ரூ.20 லட்சம் கொடுத்தோம். ஆனால், பணம் வாங்கியவர்கள் நிலத்தையும் தரவில்லை, பணத்தையும் தரவில்லை.
ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில், நாங்கள் எங்களிடம் பணம் வாங்கியவர்கள் மீது புகார் கொடுத்தோம். ஆனால், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மனம் உடைந்து இந்த முடிவுக்கு வந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து தம்பதியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-