கரூர் அருகே நோயாளியை ஏற்றிச்சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

Update: 2019-05-07 11:34 GMT
கரூர்,

கரூர் அரவக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்  என்ஜினில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் வாகனத்தை விட்டு வெளியேறினார். 2 நர்சுகள், நோயாளி மற்றும் உடன் வந்தவர்கள் கீழே இறங்கியதால் சேதம்  தவிர்க்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸ்சில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்