பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் ரத்து
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னை,
பாலித்தீன் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதை மீறி பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் ஒரு சில வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளில் 198 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.