எந்த காலத்திலும் அதிமுகவை தினகரன் தரப்பு உரிமை கோர முடியாது -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

எந்த காலத்திலும் அதிமுகவை தினகரன் தரப்பு உரிமை கோர முடியாது என துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2019-04-19 13:33 GMT
சென்னை,

அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார்.

அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக  டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மதுரையில் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- 

4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவர். எந்த காலத்திலும் அதிமுகவை தினகரன் தரப்பு உரிமை கோர முடியாது. அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்யும் முடிவு கால தாமதமானது.

மேலும் செய்திகள்