காதலிப்பதாக கூறி சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2019-04-12 16:14 GMT
சென்னை,

காதலிப்பதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்,  அதனை போட்டோ எடுத்து மிரட்டியதால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  

திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அங்குள்ள தனியார் நிறுவன ஊழியர் முகமது சுல்தான் சபீக் , காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். அதனை போட்டோ எடுத்து மிரட்டிய சபீக், தொடர்ந்து பல முறை சிறுமியிடம் எல்லை மீறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 திருப்பூர் அரசு மருத்துவனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்