பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு
பாமகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி்யின் மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
சென்னை
பொங்கலூர் மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வன்னியர் சமுதாயத்தையும், எங்களைப்போன்ற வேறு சமுதாயத்தையும் அடகு வைத்துவிட்டார்கள். பாமகவை பொறுத்தவரைக்கும் வெளியிலிருந்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். உள்ளே ஒன்றும் இல்லை.
இவ்வளவு நாள் தாமதமாக நான் ஏன் விலகுகிறேன் என்றால், மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். அந்த தொகுதி மட்டுமல்லாது எல்லா தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை காரி காரி துப்புகிறார்கள். கேவலமாக பேசுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை வெளியிடுவார்கள். மாதிரி வேளாண் அறிக்கை வெளியிடுவார்கள். பொதுவாக பாமகவின் அறிக்கை, மறியல், போராட்டம் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பேரம் இருக்கும் என கூறினார்.