வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் -முதல்வர் பழனிசாமி
வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் கூறிவரும் நிலையில், வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசுகிறார். கொடநாடு விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நீலகிரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எதுவும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா.
தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும். கலைஞரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று இருக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.