10 வயது சிறுமி பாலியல் வன்முறை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை ரத்து
தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தேனியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் 10 வயது சிறுமி 3 பேர் கொண்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கில் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. "ஒரு வழக்கில் அரசு தரப்பின் விசாரணை குறைபாடு காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால் அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.