நாடாளுமன்ற தேர்தல்; 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-04-01 13:49 GMT
காஞ்சிபுரம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிகளில், 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, காஞ்சிபுரத்தில் மொத்தம் 36 லட்சத்து 60 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 59 ஆயிரத்து 3 பேர் உள்ளனர்.  பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 485 பேர் உள்ளனர் என ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

இதேபோன்று பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்