தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - கே.எஸ். அழகிரி பேட்டி

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-22 13:51 GMT
சென்னை,

2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும். தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்றார்.

மேலும் செய்திகள்