அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2019-03-21 09:47 GMT
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 19-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 2 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டாம் நாளில் (20-ம் தேதி) வேட்பு மனு தாக்கல் மந்தமாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 10 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது, இதனையடுத்து நாளை நண்பகலில் மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்