அ.தி.மு.கவில் இணையவேண்டிய அவசியம் இல்லை -ஆதினம் கருத்துக்கு தினகரன் மறுப்பு

அ.தி.முகவில் இணையவேண்டிய அவசியம் இல்லை என ஆதினம் கருத்துக்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2019-03-21 08:25 GMT
சென்னை

அதிமுகவில் டிடிவி தினகரன் இணைவதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோவிலுக்கு மதுரை ஆதீனம் சென்றார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாது. டிடிவி தினகரன்  அணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  விரைவில் டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்றார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், மதுரை ஆதீனத்தின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது எனவும், உண்மையும் அல்ல, அதற்கு அவசியமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்