தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிப்பு - ஜி.கே. வாசன்
தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறிய ஜி.கே.வாசன்:-
சைக்கிள் சின்னம் கிடைக்காவிடில் தனி சின்னத்தில் கூட நின்று வெற்றி பெறுவோம். கூட்டணி நலனுக்காக எண்ணிக்கையை பார்க்காமல் தொகுதியை ஏற்றோம். தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.