விஜயகாந்தை விமர்சித்து கார்த்தி ப.சிதம்பரம் டுவிட்...

தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் டுவிட் செய்துள்ளார்.

Update: 2019-03-11 08:29 GMT
சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் தே.மு.தி.க. இணைந்தது. அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் - விஜயகாந்த் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிலையில் இது குறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கேப்டனாக இருந்து சிப்பாயாய் மாறி சிப்பந்தியாய் மாறி   சின்னாபின்னமானவர் தான் நம்ம விஜயகாந்த்... என பதிவிட்டுள்ளார்.

அவர் இவ்வாறு விமர்சித்து இருப்பது தேமுதிக தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்