3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டம்

3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-03-11 05:45 GMT
சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்