தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி நேர்காணல்

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-11 04:45 GMT
சென்னை,

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு விஜயகாந்த் முன்னிலையில் ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, கல்வி, தனி தொகுதிக்கு சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்