40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

Update: 2019-03-06 09:02 GMT
சென்னை,

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்.  கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். 

தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் வளர்ச்சி பணிகள் தொடரும் என்றார். அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த பியூஷ் கோயல், ஆச்சர்யங்கள் வரும் என காத்திருக்கிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்