இந்திய கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, இந்திய ஜனநாயக கட்சி-1 தி.மு.க. கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இழுபறி நிலை நீடிக்கிறது.
சென்னை,
நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடு செய்து கொள்வதிலும் அரசியல் கட்சிகள் மும் முரமாக உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தே.மு.தி.க.வையும் இந்த கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததால், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்து வந்தது.
தற்போது, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையாது என்பது உறுதியான நிலையில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் நேற்று ஒரே நாளில் தி.மு.க. தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
காலை 10.30 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிர்வாகிகளுடன் அங்கு வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன்பிறகு வெளியே வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அவை எந்தெந்த தொகுதிகள்? என்ன சின்னத்தில் போட்டியிடுகிறோம்? என்ற விவரங்கள் கட்சி நிர்வாகிகள், மற்றும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினருடன் கலந்துபேசி அறிவிக்கப்படும். தனி சின்னத்தில் பலமுறை தேர்தலை சந்தித்து உள்ளோம். என்றாலும் கூட்டணி நலன் கருதி எது உகந்த முடிவோ, அதனை அறிவிப்போம்” என்றார்.
தொல்.திருமாவளவன் சென்ற சிறிது நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். ஆனால், இந்த சந்திப்பில் தொகுதி உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
சற்று நேரத்தில் நிர்வாகிகளுடன் வெளியே வந்த கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை கேட்டு இருக்கிறோம். தி.மு.க.வும் ஒரு எண்ணிக்கையை கூறி இருக்கிறது. இதுகுறித்து நாளை (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்து, முடிவை சொல்கிறோம் என்று தி.மு.க. விடம் தெரிவித்து இருக்கிறோம். அனேகமாக நாளையும் (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் மதியம் 1.50 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில், மு.க.ஸ்டாலின், ரா.முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பிறகு வெளியே வந்த ரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறும்போது, “தி.மு.க.வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்து, கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வேண்டும். அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில் 21 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்போம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சென்ற நிலையில் பிற்பகல் 3 மணிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறும்போது, “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஒருவேளை அறிவிக்கப்படும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்று இருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து தாயகத்தில் (ம.தி.மு.க. தலைமை அலுவலகம்) நாளை (இன்று) கட்சி நிர்வாகிகள் இடையே கருத்து பரிமாறிக்கொண்டு, அதன்பிறகு மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினரை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம். பேச்சுவார்த்தையில் ஒன்றும் தாமதம் ஏற்படவில்லை. திடீரென்று சந்திக்க கூப்பிட்டார்கள். வந்து பேசி இருக்கிறோம். நாளை (இன்று) மாலைக்குள் மீண்டும் சந்திப்போம்” என்றார்.
இந்த நிலையில், நேற்று மாலை இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியானது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
பிறகு வெளியே வந்த ரவி பச்சமுத்து நிருபர்களிடம் கூறும்போது, “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் சமீபத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு என உறுதி அளித்தார். அப்போதே தி.மு.க. விருப்பப்படும் பட்சத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என்று பாரிவேந்தர் தெரிவித்து இருந்தார். அதை கருத்தில்கொண்டு எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எந்த தொகுதி கிடைத்தாலும் அதில் போட்டியிட நாங்கள் தயார். எங்களின் விருப்பமான தொகுதியாக கள்ளக்குறிச்சியை கேட்டு இருக்கிறோம்” என்றார்.
தி.மு.க. கூட்டணியில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு, துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட அதேவேளையில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளே ஒதுக்கப்பட இருக்கிறது. அவை எந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதால், நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இழுபறி நிலை நீடிக்கிறது.
எனவே, ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கை சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கதிர் அரிவாள் சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏணி சின்னத்திலும் போட்டியிடுகின்றன. இந்த 4 கட்சிகளும் தேசிய கட்சிகள் என்பதால், தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
அதேநேரத்தில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றை தி.மு.க.வின் சின்னமான உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட தி.மு.க. தலைமை வலியுறுத்துகிறது.