மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாளை மறுநாள் பேரணி; ஸ்டாலின் அறிவிப்பு
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாளை மறுநாள் பேரணி நடைபெறும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாளை மறுநாள் விருதுநகரில் பேரணி நடைபெறும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்தியிலும், அதனை தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரலாறு வரும் மக்களவை தேர்தலிலும் உறுதியாக திரும்பும். மக்களவை தேர்தலுக்கான தோழமை கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது என கூறிய அவர், இது கொள்கை மற்றும் மக்களுக்கான வெற்றி கூட்டணி என தெரிவித்து உள்ளார்.