கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை வழக்கு: கேரளாவில் கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் கோர்ட்டில் ஆஜர்
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து கேரளாவில் கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத ஷயான், மனோஜ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஷயான், மனோஜ் ஆகியோரை கோத்தகிரி போலீசார் தனிப்படை அமைத்து பல இடங்களில் தேடி வந்தனர்.
இதற்கிடையில் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ஷயான், மனோஜ் ஆகியோர் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க ‘லுக் அவுட் நோட்டீஸ்’ விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் ஷயான், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோத்தகிரி போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இரவில் ஊட்டி கோர்ட்டில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ஊட்டி கோர்ட்டு ஜாமீனை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஷயான், மனோஜ் ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்கக்கூடாது என்று அவர்களின் வக்கீல்கள் செந்தில்குமார், சிவக்குமார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது அரசு வக்கீல் பதில் அளிக்கும்படி தெரிவித்து, ஷயான், மனோஜ் ஆகியோரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று போலீசார் ஷயான், மனோஜ் ஆகியோரை ஊட்டி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது அரசு வக்கீல் பாலநந்தகுமார், கோடநாடு வழக்கில் ஷயான், மனோஜ் ஆகியோர் முக்கிய குற்றவாளி என்பதாலும், ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாததாலும் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஷயான், மனோஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ததுடன், 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். மேலும் நாளை (திங்கட்கிழமை) கோடநாடு வழக்கில் அவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து ஷயான், மனோஜ் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.