வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
சூரிய மின் திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2019 என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை,
தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2019” புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி (நேற்று) வெளியிட்டார். அதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பெற்றுக்கொண்டார்.
சூரிய எரிசக்தித்துறையில் தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் 2018-ம் ஆண்டு ஜூன் 12-ந்தேதியன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “2023-ம் ஆண்டு சூரிய எரிசக்தியின் 8,884 மெகாவாட் திறனை அடைவதற்கு ஏதுவாக, சூரிய எரிசக்திக் கொள்கை 2012 மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், தமிழ்நாடு சூரிய எரிசக்திக் கொள்கை-2012, தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை - 2023 மற்றும் தேசிய சூரிய இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2019” தயாரிக்கப்பட்டது. இப்புதிய கொள்கை மூலம் தமிழகத்தில் 9 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவுவதற்கான இலக்கினை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதோடு அனைத்து தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு நிகர பயனீட்டளவு வசதியும், சூரிய மின்திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சூரிய எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பை ஊக்குவித்தல், அதிதிறன் பயன்பாடு வகை மற்றும் நுகர்வோர் பயன்பாடு வகை மூலம் சூரிய எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் விக்ரம் கபூர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொள்கைப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
2023-ம் ஆண்டிற்குள் சூரியசக்தி மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சூரிய மின் திட்டங்கள் நிறுவுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து 40 சதவீதம் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் புதிய மின் இணைப்புகளுக்கு இரட்டை வழி மீட்டர் வழங்கப்படும். சூரிய சக்தி உற்பத்தி செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தால் 3 வாரங்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து தாழ்வழுத்த மின்சார நுகர்வோருக்கு தேவையான வசதிகளையும், சூரிய மின் திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும்.
சூரிய எரிசக்தியை உற்பத்தி செய்யும் மின்சார நுகர்வோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மின்சார வரி சலுகை அளிக்கப்படும். வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்திசெய்பவர்கள் தங்களது தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி கழகத்திற்கு கொடுத்து, அதற்கான கட்டணத்தைப் பெறலாம்.
பள்ளி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சூரிய சக்தி குறித்தும் பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சூரிய எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், அதன் பயன்பாடு வகை மற்றும் நுகர்வோர் பயன்பாட்டு வகை மூலம் சூரிய எரிசக்தி உற்பத்தி ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.