இயற்கை உபாதைக்காக பேருந்தை நிறுத்த கூறிய பெண்: மறுத்ததால் பேருந்தில் இருந்து குதித்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
இடையன்குளம் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இயற்கை உபாதை கழிக்க பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அந்த பெண் கேட்டுள்ளார்.
பேருந்து நிறுத்தப்படாததால், அதிலிருந்த பாண்டியம்மாள் கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது விவகாரம் தொடர்பாக காவல்துறையினர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.