சின்னத்தம்பி யானை விவகாரம்: வன ஆர்வலர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சின்னத்தம்பி யானையை கும்கி யானையாக மாற்றக்கூடாது என்ற வன ஆர்வலர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மெரினாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சின்னத்தம்பி யானையை கும்கி யானையாக மாற்றக்கூடாது என்ற வன ஆர்வலர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். சின்னத்தம்பி யானையை மீண்டும் வனத்திற்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பது பற்றி தகவல் தெரிவித்தால் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
யானை வழித்தட ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும். யானைக்கும், அதனால் மக்களுக்கும் எந்தவித ஆபத்தும் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.