மத்திய பட்ஜெட்: தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை - மு.க.ஸ்டாலின் தாக்கு
மத்திய பட்ஜெட் மக்களை ஆசைவார்த்தை காட்டி திசை திருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
இடைக்கால பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் மக்களை ஆசைவார்த்தை காட்டி திசை திருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை எடுப்போம் என்ற அதிர்ச்சி அறிவிப்பில் உள்ளது. நடுத்தரவர்க்கம், விவசாயிகளின் கையை பிடித்து தேர்தலில் கரையேறலாம் என கனவுலகில் பாஜக பயணிப்பது புரிகிறது.
மத்திய பாஜக அரசு ஏதோ திடீரென கனவு கண்டு எழுந்தது போல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிதிநிலை அறிக்கை பிரதமர் மோடிக்கு கொடுங்கனவாகவே இருக்கபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.