தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை
தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்,
டெல்லி தமிழகத்திற்கு எதுவும் கொடுக்காது. பொதுவாக விருதுகள் திட்டமிட்டு கொடுக்கப்படுகின்றன. டெல்லியில் முதல் முறையாக வழங்கப்பட்ட சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற விருதை தயக்கத்துடன் பெற்றேன்.
தமிழ் சமுதாயத்தில் போலிகள் அதிகம் உலாவுகிறது. கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல.
ஏழைகளுக்கு தமிழ் வழிக்கல்வி, பணக்காரர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது, இது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.