அரசியல் கூட்டணிக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை; கி. வீரமணி பேச்சு

அரசியல் கூட்டணிக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என கி. வீரமணி பேசியுள்ளார்.

Update: 2018-12-02 08:08 GMT
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் திரையுலகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.  இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கி. வீரமணி பேசும்பொழுது, கட்சிக்கும், இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றி பெரியார் தெளிவாக விளக்கியுள்ளார்.

இயக்கம் என்பது இதயம் போன்றது.  அது தொடர்ந்து துடித்து கொண்டே இருக்கும்.  கொள்கை கூட்டணி வேறு.  அரசியல் கூட்டணி வேறு.  அரசியல் கூட்டணிக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

தமிழ் இன உணர்வு, தமிழ் மான உணர்வுக்கு பேராபத்து ஏற்பட்டு உள்ளது என்று பேசினார்.

மேலும் செய்திகள்