எச்.ராஜா பேச்சு வெளிநாட்டில் ‘எடிட்’ செய்யப்பட்டுள்ளது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு
சென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
சென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓரினச்சேர்க்கை, கள்ள உறவு, அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கான அனுமதி என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பரபரப்பாக பேசப்படுகிறது. மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் எந்த விஷயமாக இருந்தாலும் அது நல்லதல்ல.
நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்ததாக எச்.ராஜா பேசிய பேச்சு, ஒரு ‘வெர்சனில்’ இல்லை, இன்னொரு ‘வெர்சனில்’ இருக்கிறது. அந்த ஆடியோ ‘டேப்’ வெளிநாட்டில் நவீன தொழில்நுட்ப வழியாக ‘எடிட்’ செய்து மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தடயவியல் துறைக்கு உள்ளது. தவிர இது எச்.ராஜா பிரச்சினை. அதை அவரே சரி செய்வார். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.