நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் அமைச்சர் காமராஜ் தகவல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
திருச்சி விமானநிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியார்களிடம் கூறியதாவது:
நெல் விளைச்சல் அதிகமிருப்பதால், கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களின் அவசியம் கூடுதலாக இருக்கிறது.
தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் முகவராகத்தான் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. கடைமடை பகுதிக்கு காவிரி நீர் சென்றடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.