தூத்துக்குடி நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர் - போலீஸ் சூப்பிரெண்டு பேட்டி

தூத்துக்குடி நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர் போலீஸ் சூப்பிரெண்டு இருவரும் பேட்டி அளித்து உள்ளனர். #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

Update: 2018-05-26 11:24 GMT
தூத்துக்குடி

ஸ்டெர்லைட்டை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய 6 உடல்களை பிரேதபரிசோதனை செய்ய சம்மதிப்போம் என தூத்துக்குடியில்  ஆட்சியரிடம் மீனவர்கள், பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி மக்களிடம் உறுதி அளித்தார் தொடர்ந்து  அவர் கூறியதாவது:-

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ 1.04 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பிவிட்டது. வங்கிகள், ஏடிஎம்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்காதபடி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன .முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது . என கூறினார்.

தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா  கூறியதாவது:-

கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் சித்தரவதை செய்யப்படவில்லை.  சட்ட விரோதமாக யாரையும் பிடித்து வைக்கவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்