தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. #ThoothukudiMassacre #Puducherry

Update: 2018-05-25 03:16 GMT
புதுச்சேரி,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது, காவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளையும் போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் போன்ற எந்த ஒரு போக்குவரத்தும்  இயங்கபடவில்லை.

மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகள்  அடைக்கப்பட்ட காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்