தூத்துக்குடி வன்முறை எதிரொலி: கல்லூரி தேர்வுகள் ரத்து
தூத்துக்குடியில் நேற்று நடந்த வன்முறை எதிரொலியாக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இன்று நடைபெறவிருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. எனினும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 65-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று நடைபெறவிருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.