ஆயிரம் விளக்கு பகுதி இரு வழிப்பாதையாக மாறுவது எப்போது?
ஆயிரம் விளக்கு பகுதி அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணியை விரைந்து முடித்து இரு வழிப்பாதையாக விரைவில் மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்துவருவதால் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலைகளில் பல்வேறு இடங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் சுற்றிச்செல்லும் நிலை இருந்தது. மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட 2009-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த சாலைகளில் வழக்கம் போல் இருவழி போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து இந்த சாலை முழுவதும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
சென்னையின் இதயப்பகுதியான அண்ணாசாலையில் மட்டும் பணிகள் இழுத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை நோக்கி செல்பவர்கள் ராயப்பேட்டை வழியாக சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையில்லாத எரிபொருள் செலவும், நேரமும் வீணடிக்கப்படுகிறது.
இந்த பாதையில் பணிகளை விரைந்து முடித்து இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்துவருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது.
அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரஷிய நிறுவனம் பாதியிலேயே சென்று விட்டதால் தான் திட்டமிட்ட காலத்தில் பணியை முடிக்க முடியவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அண்ணாசாலையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) வரை பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு ஆணையர் ஆய்வில் உள்ளது. இம்மாத இறுதியில் இந்தப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை இருவழிப்பாதையாக போக்குவரத்து நடந்தாலும், முறையான போக்குவரத்து சிக்னல்கள், சாலை தடுப்புகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும். எனவே அண்ணாசாலையில் இந்த ஆண்டு இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றத்தால் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். நாங்களும் பணியை விரைந்து முடிக்க மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். பணிகள் முடிந்து சாலை சீரமைக்கப்பட்ட பின்னர் அண்ணாசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து வழக்கமான போக்குவரத்து நடைபெறும். அதன்பிறகே அண்ணாசாலை பொலிவுபெறும்” என்றார்.