கூடங்குளம் அணு உலைகளை இயக்கக் கூடாது வைகோ வலியுறுத்தல்
கூடங்குளம் அணு உலைகளை இயக்க கூடாது என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்னை,
இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவை, ஏன் உலகத்தையே அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம், அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்? என்கிற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முக்கியமாக பூவுலக நண்பர்கள் கொடுத்த வழக்கில் வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போவதாக தெரிவித்தது. தமிழகத்தில் எந்த எந்த கட்சிகள் எல்லாம் அன்றைக்குக் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றிணைந்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகாவின் எந்த பகுதியிலும் வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தின. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்புகளை 5 வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் விதித்த 5 வருட காலம் இந்த மே மாதத்துடன் முடிவுற்றது. உச்ச நீதிமன்றத்தை நாடிய தேசிய அணு மின்கழகம், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைத் தாங்கள் கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே வைக்கப் போவதாகவும், அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லையெனவும் தெரிவித்து மேலும் கால அவகாசத்தை 5 ஆண்டுகள் நீட்டித்துத் தரக் கோரியுள்ளது.
கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது என்றும், பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதற்கு உரிய தொழில்நுட்பத்தை முடிவு செய்து கட்டமைக்கும் வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.