மேட்டூா் அணையை திறப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #MKStalin #Mettur #TNGovernment
சென்னை,
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் மேட்டூா் அணையை உடனே திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மேட்டூா் அணையை திறப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து ஸ்டாலின் கூறியதாவது,
“தமிழக விவசாயிகளின் நலன் கருதி டெல்டா பாசனத்திற்கு ஜீன் 12ம் தேதி மேட்டூா் அணையை திறக்க வேண்டும்”. என்றும் “மேட்டூா் அணையை திறப்பதற்கு உரிய தீவிரமான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்” என வழியுறுத்தினார். பின்னர், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவா் உறுப்பினா்கள் உடனே நியமிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடா்ந்து, “ஜீன் 1ஆம் தேதி வரை காத்திராமல், எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் உடனே உறுப்பினா்களை நியமிக்க வேண்டும்”. ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் இருக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இதைத்தொடா்ந்து தீா்ப்பின்படி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீா் தங்குதடையின்றி உடனடியாக கிடைக்க வேண்டும், இவ்வாறு அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.