தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:-
தெற்கு கர்நாடகாவிலிருந்து தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு நிலவும் என்றும், மாலத்தீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.