2023–ம் ஆண்டுக்குள் கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் செயல்படும் இந்திய அணுசக்தி கழக தலைவர்

2023–ம் ஆண்டுக்குள் கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் செயல்படும் என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் கூறியுள்ளார்.

Update: 2018-05-10 18:51 GMT
சென்னை

இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வியாட்நாம் நாட்டுடன் நட்புணர்வை உருவாக்கவும், அந்த நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்யவும் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. விருப்பம் உள்ள துறைகளில் வியாட்நாம் நாட்டுக்கு உதவிகள் செய்யப்படும்.

கூடங்குளத்தில் 1–வது மற்றும் 2–வது அணுஉலைகள் செயல்படுகின்றன. தற்போது 1–வது அணுஉலையில் பராமரிப்பு பணி நடப்பதால் மே மாதத்துக்குள் அது செயல்படும். 3–வது மற்றும் 4–வது அணுஉலைகள் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 5–வது மற்றும் 6–வது அணு உலைகளுக்கு தேவையான ஆயத்த பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டுக்கு ஒவ்வொரு அணுஉலைகளாக வருகிற 2023–ம் ஆண்டுக்குள் கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் செயல்பட தொடங்கும். அதன்மூலம் 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்