சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. #IIT #MadrasIIT

Update: 2018-05-10 12:37 GMT
சென்னை,

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 7 பேர் குளிக்கச்சென்றதாகவும் அதில், 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 உயிரிழந்த 2 பேரும் கானகம் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அனுமதியின்றி ஐஐடி வளாகத்தின் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து ஏரியில்   குளிக்கச்சென்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்