நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது. #Nirmaladevi

Update: 2018-05-10 10:40 GMT

சென்னை

 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

நிர்மலாதேவி விவகாரத்தில்  விசாரணை நடத்திய சந்தானம்  மே 15-ல் அறிக்கை தர உள்ளதாக  தெரிவித்த நிலையில், கணேசன் என்பவர் சந்தானம் குழு அறிக்கை தர தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் .

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்   நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம்  குழு அறிக்கை  வெளியிடத் தடை விதித்து உள்ளது. நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கும் ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.

மேலும் செய்திகள்