சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். #Rajinikanth #Rajnimakkalmantram
சென்னை
‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தும் நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னை வந்தனர். விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் குவிந்தனர்.
பாடல் வெளியிட்டு விழாவா? ரஜினிகாந்த் ரசிகர்கள் மாநாடா? என்று நினைக்கும் அளவுக்கு திரும்பிய திசை எல்லாம் கூட்டம் அலைமோதியது. அழைப்பிதழ் கிடைக்காத ரசிகர்களும், பொதுமக்களும் அரங்கின் வெளியே திரண்டிருந்தனர். காலா படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை மாநாடு போல் நடத்தி முடித்த ரஜினிகாந்த் இன்று மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்குப் பின் போயஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநில மன்ற நிர்வாகிகளுடன் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.