தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்: குருமூர்த்தி

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். #Rajinikanth

Update: 2018-05-09 11:30 GMT
சென்னை,

ஆடிட்டர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பது போல் தெரியவில்லை; இருந்தால் பார்க்கலாம் .நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால் போராட்டம் நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமைதான். 

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன்.கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன்  காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா, கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்