குட்கா ஊழல் வேறு மாநில அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் சிபிஐக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
குட்கா ஊழலில் வேறு மாநில அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என சிபிஐ இயக்குநருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். #GutkaScam #CBIProbe #MKStalin
சென்னை,
குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனை எதிர்க்கட்சிகள் வரவேற்று உள்ளன. இந்நிலையில் சிபிஐ இயக்குநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். குட்கா ஊழல் வழக்கில் நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் அரசியல்வாதிகள், நேர்மையற்ற அதிகாரிகள் என பின்னி பிணைந்துள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். குட்கா விவகாரத்தை விசாரிக்க நேர்மையான, அனுபவமிக்க, வேறு மாநில அதிகாரிகளை கொண்ட சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.