நிர்மலா தேவி விவகாரம் பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை

நிர்மலா தேவி விவகாரத்தில் பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொள்கிறது. #NirmalaDevi

Update: 2018-04-23 14:21 GMT

சென்னை,


கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியர் நிர்மலா தேதி விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உதவிப் பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை காமராசர் பல்கலை. நுழைவு வாயிலில் பதிவான ஒருவருடத்திற்கான சிசிடிவி காட்சிகளை கொண்டு சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொள்கிறது.

மேலும் செய்திகள்