மீன்பிடி தடைகாலம்: மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்த வேண்டும் தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை
தமிழக கடல் பகுதிகளில் 61 நாட்களுக்கு மீன்பிடித்தடைகாலம் அமலுக்கு வந்துள்ளது. #GKVasan
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கடல் பகுதிகளில் 61 நாட்களுக்கு மீன்பிடித்தடைகாலம் அமலுக்கு வந்துள்ளது. மீன்பிடித்தடைகாலத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உள்கட்டமைப்புடன் கூடிய துறைமுக வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இக்காலத்தில் மீனவர்களின் படகுகள், வலைகள் போன்றவற்றை பராமரிக்க தமிழக அரசே பணிகளை மேற்கொள்ள முன் வர வேண்டும். மீன்பிடித்தடைகாலத்திலேயே மீனவர்களுக்கான நிவாரணத்தொகையை வழங்கிட வேண்டும்.
எனவே மீன்பிடித்தடைகாலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிரமமின்றி தொடர வேண்டும் என்றால், மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.