திரைப்படங்கள் கேளிக்கையா? திரைத்துறையினர் பதில்சொல்வார்களா?: தமிழிசை சவுந்தராஜன் கேள்வி

திரைப்படங்கள் கேளிக்கையா? என்ற கேள்விக்கு ஐபிஎல்லை எதிர்த்த திரைத்துறையினர் பதில்சொல்வார்களா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். #IPL #BJP

Update: 2018-04-20 03:29 GMT
சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில்  போராட்டம் நடைபெற்று வந்தது. காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராடிய அமைப்புகள், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கூறி  தீவிர போரட்டத்தை முன்னெடுத்தன. போராட்டத்தின் வீரியத்தை ஐபிஎல் போட்டிகள் குறைத்துவிடும் என  ஐபிஎல்  போட்டிக்கு எதிராக போராடிய அமைப்புகள் கூறின. இந்தப்போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன. 

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திரைத்துறையினர் சிலரும் எதிர்ப்பு குரல் கொடுத்த நிலையில், திரைத்துறையில் நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று முதல் படப்பிடிப்புகள் நடைபெறும் என்று பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று முதல் திரைப்படங்களும் வெளியாக உள்ளன. 

இந்த நிலையில், திரைப்படங்கள் கேளிக்கை இல்லையா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை சவுந்தராஜன் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ஐபிஎல் கிரிக்கெட் கேளிக்கை என எதிர்த்த திரைத்துறையினர் நாளை (இன்று) ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் கேளிக்கையா?என்ற கேள்விக்கு பதில்சொல்வார்களா?திரைப்படத்தை பார்க்கச்செல்லும் தமிழர்களை அடிப்பார்களா?இல்லை தங்கள் துறை என்பதால் தெரியாதது போல் நடிப்பார்களா?” இவ்வாறு தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்