எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதங்கம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கவிஞர் கனிமொழி எம்.பி. குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டு இருந்தார். #HRaja #TamilisaiSoundararajan

Update: 2018-04-18 21:19 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கவிஞர் கனிமொழி எம்.பி. குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எச்.ராஜாவின் கருத்துக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

டுவிட்டரில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மன வேதனையைத்தருகிறது’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்