கைதான நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி கவர்னர் பேட்டி
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
சென்னை,
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவிகளை பாலியலுக்கு அழைப்பது போல செல்போனில் உரையாடியபோது, கவர்னரின் பெயரை பயன்படுத்தினார்.
இதனால், இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புபடுத்தி அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி வருகின்றனர். சமூக வலைத்தளங் களிலும் பெண் விவகாரத்தில் கவர்னரின் பெயர் இணைத்து கருத்து பரிமாறப்பட்டு வருகிறது.
இதற்கு பதில் கருத்து கொடுக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சியை கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
ஒரு கல்லூரி பேராசிரியை தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அந்த விவகாரம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதில் தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அனைத்து கோணங்களிலும் இதுபற்றி முறையாக விசாரணை நடத்தி, இந்த சம்பவம் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் என்னிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் இந்த விசாரணை குழுவை நான் நியமித்தேன். பொதுவாக, அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் செயல்படவேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது.
ஆனால், பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி பெற்றவை என்பதால், அதன் வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு அந்த பல்கலைக்கழகங்களின் மீது தனி அதிகாரம் உண்டு. இதை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும், மீண்டும் பல்வேறு வழக்குகளின் மூலம் உறுதி செய்துள்ளது.
அதன் அடிப்படையில், பல்கலைக்கழக வேந்தர் (கவர்னர்) இப்படித்தான் செயல்படவேண்டும் என்று மாநில அரசு, அவருக்கு அறிவுரை வழங்க இயலாது. பல்கலைக்கழக சட்டங்களிலும் இந்த வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கு துணைவேந்தர்தான் பொறுப்பு என்றாலும், பல்கலைக்கழக சட்டவிதிப்படி அதன் தலைவராகவும், செனட்டின் தலைவராகவும் வேந்தர்தான் செயல்படுவார்.
எனது பெயரை அந்த பேராசிரியை தனது உரையாடலில் பயன்படுத்தியிருப்பதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், அந்த பெண்ணின் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை.
என்னை எளிதில் விழா நிகழ்ச்சிகளின்போது நெருங்கமுடியாது. என்னை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருப்பார்கள். ஆனாலும், அங்கும், இங்கும் சிலர் செல்வார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டு கூறப்படும் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. இந்த பிரச்சினையில் எனது பெயரை இணைத்து பேசுவது அபத்தமான ஒன்றாகும்.
என்னை நீங்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர் என்று குறிப்பிட்டு பேசுகிறீர்கள். எனது வயது 78. நான் கொள்ளுபேரனை வைத்திருப்பவர். உங்கள் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தையை நான் கேட்க விரும்பவில்லை.
இந்த குற்றச்சாட்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுமா? என்று கேட்டால், அந்த விசாரணை தேவைப்பட்டால் அதற்கு உத்தரவிடுவதற்கு நான் தான் முதல் ஆளாக இருப்பேன்.
எனவே, இந்த விஷயத்தில் ஒருநபர் விசாரணை குழுவை அமைத்ததற்கு அரசின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் எழவில்லை. மாநில கவர்னர்களின் வழிகாட்டி என்ற புத்தகத்தில் அது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல் கலைக்கழகங்களின் முற்றிலும் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதைதான் நான் விரும்புகிறேன். அதற்கேற்றபடி, நிர்வாக வழிமுறைகளை வகுக்க நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதுபோன்ற பிரச்சினைகள் வராத வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படும்.
பல்வேறு அரசியல் கட்சிகள் நான் பதவி விலகவேண்டும் என்று கூறியிருப்பதை குறிப்பிடுகிறீர்கள். அவர்கள் அவர்களது கடமையை செய்கிறார்கள். நான் எனது கடமையை செய்துகொண்டிருக்கிறேன்.
இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எனது பதில். என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அறிவு கெட்டதனமானது. நான் பதவி விலகவேண்டும் என்று சிலர் கூறினால், அவர்கள் கூறிக்கொண்டு இருக்கட்டும்.
தமிழக அரசின் செயல்பாட்டில் எனக்கு திருப்தி உள்ளது. அரசின் செயல்பாடு மீது திருப்தி இல்லை என்று நான் கூறியதாக தி.மு.க. சார்பில் கருத்து கூறப்பட்டதை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகம் தொடர்பான செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றுதான் கூறியிருந்தேன். மற்றபடி ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது.
இந்த உதவி பேராசிரியை விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்கு ஒரு பெண் தேவைப்பட்டால், அந்த பெண்ணை நியமித்துக்கொள்ள கமிஷன் தலைவருக்கு சுதந்திரம் உள்ளது.
ஒரு கவர்னர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரே ஒரு விசாரணைக் குழுவை அமைக்கலாமா? என்று கேட்டால், இந்த குற்றச்சாட்டு முழுவதும் பொய்யானது. நான் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன், நிராகரிக்கிறேன். இந்த விசாரணை நேர்மையாக நடக்கும் என்பதை மக்கள் உறுதியாக நம்பலாம்.
நான் தமிழகத்துக்கு வந்து நியமித்த 5 துணைவேந்தர்களில், 3 பேர் தமிழர்கள்தான். இந்த நியமனத்தில் இந்தியாவுக்கு இடையேயான மாநிலங் களில், யாரை எங்கு வேண்டுமானாலும் இதுபோன்ற பதவிகளில் நியமிக்கமுடியும். நான் அரசியல் சாசனத்தை நிச்சயமாக பாதுகாப்பேன். அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டுதான், இந்த பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். எனது பணியை நான் சிறப்பாக செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியில் நிருபர்கள், எந்த அளவுக்கு தமிழை கற்று இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர், 2 தமிழ் வரிகளை உச்சரித்தார். அதாவது, ‘தமிழ் இனிமையான மொழி. எனவே நான் தமிழை விரும்புகிறேன்’ என்று கூறினார்.
பாலியல் குற்றச்சாட்டு என்ற வார்த்தைகளை நிருபர்கள் கூறியபோது, கவர்னரின் முகம் கோபத்தால் சிவந்தது என்றாலும், உடனடியாக அதை சிரித்து சமாளித்தார். ஆனாலும், இதுபோன்ற குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்தபோது சில பெண் மற்றும் ஆண் நிருபர்களிடம் கோபப்பட்டு பேசினார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி 53 நிமிடங்கள் நீடித்தது. அமைச்சரவை பதவி ஏற்பு, முக்கிய விருந்தினர்களின் நூல் வெளியீடு போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும் தர்பார் அரங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை கவர்னர் நடத்தியது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.